உங்களுடைய மொழியில் நீங்கள் எதிர்பார்க்கின்ற தகவல்களை உங்களால் கண்டறிய முடியவில்லை எனில், உங்களுக்குத் தேவையான சேவையைத் தொடர்புகொள்ள பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்.

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவை (Translating and Interpreting Service, TIS) நேஷனல்

குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையிலிருக்கும் (DIBP) TIS நேஷனல் ஆனது, ஒரு நாளில் 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொலைபேசி உரைபெயர்ப்பாளர்களை வழங்குகிறது. 13 14 50 என்ற எண்ணை அழைப்பதன் மூலம், நீங்கள் ஆஸ்திரேலியாவில் எந்த இடத்திலிருந்தும் உள்ளூர் தொலைபேசி அழைப்புக் கட்டணத்தில் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்கான தேசியச் சான்றளிப்பு ஆணையம் (NAATI)

NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது உரைபெயர்ப்பாளரை நீங்கள் கண்டறிவதற்கு:

  • அவர்களை ஆன்லைன் விவரத்திரட்டில் தேடலாம்
  • NAATI-ஐ 1300 557 470 (ஆஸ்திரேலியாவில் மட்டும்) என்ற எண்ணில் அழைக்கலாம்.

யெல்லோ பேஜஸ்

யெல்லோ பேஜஸில் ”Interpreters" அல்லது "Translators" என்ற சொற்களைத் தேடுவதன் மூலம் நீங்கள் மொழிபெயர்ப்பாளர்களையும் உரைபெயர்ப்பாளர்களையும் கண்டறியலாம்.

மற்ற மொழிகளில் மனிதவளச் சேவைகள் துறையின் தகவல்கள்

பின்வரும் தகவல்கள் உள்ளிட்ட தனது பல்வேறு வெளியீடுகளின் மொழிபெயர்ப்புகளை மனிதவளச் சேவைகள் துறை வழங்குகிறது:

  • புதிதாக வந்துள்ள குடிவரவாளர்களுக்கானத் தகவல்கள்
  • பகுதிநேர மற்றும் நாட்கூலியாட்களுக்கானத் தகவல்கள்
  • ஆஸ்திரேலியாவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையிலான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள்
  • வழங்குத்தொகைகளும் சேவைகள் குறித்த தகவல்களும்.

மனிதவளச் சேவைகள் துறையின் உரைபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சேவைகள்

வழங்குத்தொகைகள் மற்றும் சேவைகளுக்காக நீங்கள் விண்ணப்பம் செய்ய உங்களுக்கு இரகசியமாக உதவுவதற்காக, மனிதவளச் சேவைகள் துறை இலவசமாக உரைபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்புச் சேவைகளையும் வழங்குகிறது.

குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (DIBP)

புதிய குடிவரவாளர்கள் மற்றும் நுழைவுரிமைகளைப் பெற ஆர்வம் கொண்டுள்ள மக்களுக்கான ஆலோசனைகள் அடங்கிய மொழிபெயர்க்கப்பட்ட வளஆதாரங்களின் பட்டியல் ஒன்று DIBP வசம் உள்ளது.

மற்ற மொழிகளில் ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) குறித்த தகவல்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள வரி விதிப்பு முறையை நீங்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கு, ஆன்லைன் வெளியீடுகளை ATO வழங்குகிறது. அராபிக், அஸ்ஸிரியன், ஆஸ்லான், பர்மிஸ், சீனம், குரோஷியன், தாரி, டிங்கா, ஃபார்சி, கிரேக்கம், இந்தி, இந்தோனிஷியன், இத்தாலியன், ஜப்பானிஸ், கரென், கீமர், கொரியன், மார்சிடோனியன், ரஷ்யன், செர்பியன், சோமாலி, ஸ்பானிஷ், தாய், டர்கிஷ் மற்றும் வியட்நாமிய மொழிகளில் பதிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

Was this page helpful?